விருதுநகர் அருகே  தண்ணீர் குழாயை திறந்தவிடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே உபயோகத்தில் இருந்து அடைத்த தண்ணீர் குழாயை திறந்த விடக்கோரி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் அருகே  தண்ணீர் குழாயை திறந்தவிடக்கோரி பொதுமக்கள் முற்றுகை
Updated on
1 min read

விருதுநகர் அருகே உபயோகத்தில் இருந்து அடைத்த தண்ணீர் குழாயை திறந்த விடக்கோரி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் பாவாலி ஊராட்சி சேர்ந்தது கோட்டைப்பட்டி தெரு. ஆனைக்குட்டம் அணையிலிருந்து விருதுநகருக்கு வரும் குழாய் இணைப்பு மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இக்குழாய் தண்ணீரை திடீரென அடைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனே தண்ணீர் குழாயை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர்-சிவகாசி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்கள் சென்றனர். அப்போது, தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் நாகராஜை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, இப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் இக்குழாய் நீரையே நம்பியுள்ளனர். அதனால் அடைக்கப்பட்டிருக்கும் குழாயை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர். அதையடுத்து ஊராட்சி தலைவர் உடனே தண்ணீர் குழாயை திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com